மாணவனின் நெஞ்சில் உதயமான முதல் கவிதை.
பள்ளி மாணவன் ஒருவன் தனது சக தோழியுடன் காதல் கொள்கிறான், ஆனால் காதலை வெளிப்படுத்த முடியாமல் தவித்தான் ! ஏதோ அவன் தவிப்பினாலோ அல்லது அவன் தமிழ் மீது வைத்திருந்த அன்பினாலோ கலைமகள் அவனது நாவில் குடியேற சுருதி ஒன்றைக் கூற பேனாவோ அதை எழுதியது.
பேனா எழுதிய சுருதி:
கங்கையும் யமுனையும் ஒன்று சேர்ந்த இடம் பிரயாக்ஜியம்,
அறிவும் அழகும் ஒன்று சேர்ந்த இடம் மராட்டியம் !
அன்று முகலாயர்களை வீழ்த்தியது சிவாஜியின் படை,
இன்றோ எனை வீழ்த்தியது பெண்ணே உன் நடை !
கடிகாரத்திற்கோ கால் இல்லை ,
உன் சுருதியை கோர்க்க வரியில்லை !
நாட்டியம் ஆடும் பெண்ணின் சிலம்பிலிருந்து கேட்டதோ ஓர் ஓசை ,
என்னை தூங்கா வைத்திருக்கும் பெண்ணே உந்தன் குரலோசை !
பயிர்களை காக்க வேலியுண்டு !,
உன்னை காதலிக்க என்ன வழி உண்டு?
சொல் பெண்ணே !!
-- பரதேசி
Comments
Post a Comment