மாமனின் ஏக்கம்.

    

குப்பன் தனது மனைவி குப்பியை விட்டு வேலைக்காக வெளியூர் செல்கிறான் புதிதாக மணந்த ஜோடிகள் போல!.குப்பன் அவளது பிரிவை தாங்கிக் கொள்ள முடியாமல் ஊசலாடிக் கொண்டிருந்தான் அப்பொழுது குப்பிக்கு கடிதாசி ஒன்றினை எழுதினார் கடிதாசியே இது!

 

மனைவிக்கு எழுதிய கடிதாசி:

        காடுகளை தாண்டி மலைகளைத் தாண்டி பாய்கின்ற நதியைப் போல,

இனம் கடந்து மதம் கடந்து பாய்கின்றதோ யம்காதல் !

வையமோ ஆதவனை சுற்றி வந்தது போல்,

யாமோ உன்னை சுற்றி வந்தேனடி !

வாலியை வீழ்த்த ராமனோ தந்திரம் செய்தான்!,

நீயோ என்ன தந்திரம் செய்தாய் என்னை வீழ்த்த?

காதலில் விழுந்த மனம் பித்தானதே ,

உன் இரு கரங்களோ என் சொத்தானதே !

பேனாவின் முனையோ உன்னை எழுதியது!

மாமனது மனமும் உன்னை தேடியது!

பீடி வாங்க காசு இல்லையடி,

உன்னை எண்ணாத நாள் இல்லையடி!

           ~குப்பன்


 






Comments