சிதைந்த தேசம்
வடதிசையில் மகதம் மற்றும் விராடம் இடையே போர் மூண்டது. போர் சுமார் 9 நாட்களுக்கு நடந்தது. சிறுவயதிலேயே தந்தையை இழந்த மேகதூதன் (மகத நாட்டின் வேந்தன்) தனது 12 வயதில் அரியணையை அலங்கரித்தான். சிறப்பான ஆட்சியை நடத்தி வந்தான். இவன் தனது 25 வயதில் விராட நாட்டு இளவரசி(மேகலை)உ டன் காதல் கொள்கிறான். இருவரும் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு காதலித்து வந்தனர். இதற்கிடையில் போர் உக்கிரமடையத் தொடங்கியது. தனது வீரத்தாலும் விவேகத்தாலும் விராடத்தின் இளவரசனை மாய்த்தான். விராட நாட்டின் படைகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தான் மேகதூதன்! எஞ்சியது விராட நாட்டில் அரசர் மட்டும்தான்.
போரின் எட்டாம் நாள் மாலையில் மேகலையிடமிருந்து தூதுவர் தூதில், “எனை அழைத்துச் செல்ல வா” என்று இருந்தது. தமயனை இழந்த சோகத்திலும் மேகலை தூது அனுப்பினாள். மேகதூதன் அந்தப்புரத்திற்கு விரைந்து சென்றான். அங்கு மேகலை, மேகதூதனை கட்டி அணைத்துக் கொண்டாள். கண்களை மூடி காதலை வெளிப்படுத்திய நிலையில் தனது சேலையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் நான்கு முறை வெட்டி தனது சோகத்தை வெளிப்படுத்தினாள். குருதி ஓட, தனது இறுதி வசனத்தை கூறி விண்ணுலகம் பிரதேசித்தான் மேகதூதன்.
மேகதூதனின் வசனம்.
மதியும் ஆதவனாய் இருவர் இருந்தோம்,
நிறம் மாறினாலும் எண்ணம் ஒன்றாக!
ஒளி தரும் மின்மினி பூச்சி அவள்,
அன்று எனது தேசத்திற்க்கு
ஒளி
அளித்தாள்!,
ஆனால் ஒரு நாள் எங்கோ ஓடி மறைந்தாள்,
எனது தேசமோ இருளானது!
கார்மேகங்களோ சூழ்ந்தது!
பித்து பிடித்த பரதேசி போல் அலைந்தேன் அவளை தேடி!,
விழி இரண்டும் பொய்யானதே அவளை நினைத்துப் பாடி!.
விண்ணை முட்டும் அவள் நினைவுகளோ எதிர் நாட்டு பானங்களாக என்னை தொடுத்தன!,
அவள் பட்டறையில் செய்யப்பட்ட வாளோ நிமிர மறுத்தன!
அவளது குரோதம் என்னை நடுங்கச் செய்தது!
என்னவளான இவள் என்னை மாய்த்ததால்,
குலை உயிருமாய் குருதி ஓட,
வானில் தோன்றும் விண்மீனை போல் காத்திருப்பேன் இளவரசி!
-மேகதூதன்
Comments
Post a Comment