வேந்தனின் தூது

 

சத்ரியன் ஒருவன் ஒரு சாமானிய பெண்ணிடம் காதல் கொள்கிறான். ஆனால்  அவனது காதல் சத்திரிய குல தர்மத்திற்கு ஒரு அணை கட்டாக இருந்தது.எனினும் அதை மீறி காதல் வயப்படுகிறான் ஒருதலையாக அப்பெண்ணை காதலிப்பதால் அதை வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறான் ஆனால் அவன் வேந்தன் என்பதால் தனது சகத் தோழியிடம் ஒரு கடிதாசியை கொடுத்து தன் காதலிக்கு தூது செல்ல வேண்டினான்.





கடிதாசியில் இருந்தவை:


காதல் தீயோ பத்தியதே,

மனங்கள் பித்தாய் மாறியதே!.

உன் விழியிலோ நான் தொலைந்தேன் ,

தொலைந்தோ தனிமை காட்டில் நான் அலைந்தேன் !

உன் காதனியோ ரம்மியம் பேசியதே ,

என் பேனாவோ உன் காவியம் எழுதியதே!

சிதைமிக்க மதியிவளோ?

கனைகள் தொடுக்கும்  வில் இவளோ?

பவளங்கள் தோற்கும் உன் இமையில் ! ,

காதல் வீசும் உன் கணையில் !,

இச்சையினை துறந்து, வெட்கத்தினை மறந்து!

உன்னடி சாயுவேன் என்னவளாக்க !.

                                                                                -மனவேந்தன்


                                                                                                

                                                                        

                                                                                                                                                                    






Comments